சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பு பற்றிய இந்த விஷயங்களை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!!

Author: Hemalatha Ramkumar
21 January 2022, 1:03 pm
Quick Share

நம் சருமம் மற்றும் தலைமுடி பராமரிப்பில் கோடைக்காலத்தில் நாம் வழக்கமாகச் செய்வதை விட குளிர்கால அதிகமாக செய்ய வேண்டி இருக்கும். சிலர் அதை மனதில் கொள்ளாமல் எப்போதும் போல இருந்து விடுவார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், கவலைப்பட வேண்டாம். குளிர்ந்த மாதங்களில் முடி மற்றும் தோல் பராமரிப்புக்கான சில எளிய விதிகளைப் பார்க்கலாம்.

முடி பராமரிப்பு:
* தலைமுடியைக் கழுவுவதற்கு வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர்:
வெந்நீரில் குளிப்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தது என்றாலும், அதைக் கொண்டு முடியைக் கழுவினால், தலை சுற்றல், வறட்சி மற்றும் பொடுகு போன்றவை ஏற்படும். எப்போதும் வெதுவெதுப்பான அல்லது முடிந்தால், குளிர்ந்த நீரில் கழுவவும்.

* கண்டிஷனிங்: குளிர்காலம் உங்கள் தலைமுடியை கூடுதலாக உலர வைக்கிறது. இது, ஸ்டைலிங் பொருட்கள் மற்றும் ஸ்ப்ரேக்களுடன் சேர்ந்து, அவற்றை மிகவும் உலர வைக்கும். ஆகவே உங்கள் கூந்தலுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்கு எண்ணெய் சார்ந்த மாய்ஸ்சரைசர் அவசியம்.

* எண்ணெய் தடவுதல்: கழுவுவதற்கு முன் எண்ணெய் மசாஜ் செய்வது மிகவும் முக்கியம். இது உங்கள் குளிர்கால முடி வழக்கத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

* ஹேர் மாஸ்க்குகள்: குளிர்காலத்தில் பொடுகு மற்றும் உச்சந்தலையில் எரிச்சல் அதிகம் ஏற்படும். பொடுகைத் தவிர்க்க எலுமிச்சை சார்ந்த ஹேர் மாஸ்க்குகளை முயற்சி செய்யலாம்.

சரும பராமரிப்பு:
* வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர்: உங்கள் தலைமுடியைப் போலவே, உங்கள் முகத்தை கழுவுவதற்கு வெந்நீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் அது சருமத்தை உலர்ந்து போக செய்யும். வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவது சிறந்த வழி.

* தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர் மட்டுமல்ல. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது சுற்றுச்சூழல் அழுத்தங்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

* வைட்டமின் C சீரம்: வருடத்தின் நேரத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு நல்ல வைட்டமின் C சீரம் எப்போதும் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

* கற்றாழை ஜெல் அல்லது கிளிசரின்:
சருமத்திற்கு கற்றாழை ஜெல் அல்லது கிளிசரின் ஆசீர்வாதமாக அமைகிறது. அவை உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்க உதவுவது மட்டுமல்லாமல், மென்மையாகவும், கிளியராகவும் இருக்கும்.

* எக்ஸ்ஃபோலியேட்டிங்: சரியான உரித்தல் மூலம் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும். இது எளிதான செயல் மற்றும் உடனடியாக முடிவுகளை உங்களுக்கு வழங்கும்.

* லிப் பாம்: குளிர்காலம் உங்கள் உதடுகளை உலர்த்தும். மென்மையான உதடுக்கு எப்போதும் உங்கள் பையில் லிப் பாம் வைத்திருங்கள்.

Views: - 2975

0

0