ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி : பாஜகவில் 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் இணைந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 9:51 pm
Rajini Annamalai - Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில் இணைந்தனர்.

தஞ்சாவூரில் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர் ரஜினி கணேச்ன உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, மோடி என்பவர் பாஜகவில் ஒரு தொண்டன். அவர் பிரதம மந்திரியாக வேலை செய்கிறார். தாய் மொழி, கலாச்சாரம் எல்லாத்தையும் தாண்டி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் பாஜகவை ஏற்றுக்கொண்டனர்.

எனவே அவரவர் மாநிலங்களில், அவரவர் இருக்கவேண்டும். அவரவர் மொழிக்கு உரிய மரியாதை தரப்படும். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அனைவரும் தேசிய வாதியாக இருக்க வேண்டும் .

எல்லா கட்சிகளிலும் ஓனர் இருப்பார்கள். அங்கு இருப்பவர்கள் தந்தையிடம் கைகட்டி நிற்க வேண்டும், பிறகு மகனிடம் கைகட்டி நிற்க வேண்டும், பின்னர் பேரனிடம் கைகட்டி நிற்க வேண்டும்.

டெல்லியிலும், கோபாலபுரத்திலும் அதன் ஓனர்கள் இருப்பார்கள். ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் நிலை உள்ளது. எனவே யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டிய அவசியம் இருக்காது என தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் எத்தனை குட்டிக்கரண்ம போட்டாலும், பொதுவேட்பாளர் நிறுத்தினாலும் பாஜக வேட்பாளர்களை வைத்தே நாங்கள் தனியாக ஜெயித்துவிடுவோம் என அவர் தெரிவித்தார்.

அதிமுகவின் ஒற்றைத் தலைமை குறித்த கேள்விக்கு, எப்படிப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும் என முழுமையாக தீர்மானிக்க கூடிய சக்தி அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. அதிமுக ஒற்றைத் தன்மை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது என அவர் தெரிவித்தார்.

Views: - 516

0

0