20 ஓவர் போட்டியா? 50 ஓவர் போட்டியா? பும்ரா, ரோகித் அதிரடியால் இங்கிலாந்து அணி படுதோல்வி : கம்பீரமாய் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா!!

Author: Udayachandran RadhaKrishnan
12 July 2022, 10:06 pm
Ind won - Updatenews360
Quick Share

தற்போது இந்தியா இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் உள்ளன.

ஏற்கனவே மூன்று 20 ஓவர் போட்டிகள் நடந்து முடிந்து, அந்த தொடரை இந்தியா வெற்றிகரமாக வென்றது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி இங்கிலாந்த பேட்டிங் செய்ய அழைத்தது,

அதிலும் குறிப்பாக நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா ஆறு விக்கெட்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். மேலும் இங்கிலாந்து வீரர்கள் 110 ரன்கள் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தனர்.

சுலபமான இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் தவான் எதிர்கொண்டு விளையாடினர். அதிலும் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடிஅரை சதத்தை கடந்து இந்தியாவிற்கு வெற்றியை பெற்று தந்துள்ளார். மேலும் இந்த போட்டியில் எந்த ஒரு விக்கெட்டையும் இழக்காமல் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ரோகித் ஷர்மா 76 ரன்களிலும், தவான் 31 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

Views: - 1821

1

0