வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு…அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்: புதிய விலை என்ன தெரியுமா?
Author: Aarthi Sivakumar7 May 2022, 8:44 am
சென்னை: சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து விலை ரூ.1000ஐ தாண்டியது.
சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை இன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இதனால், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை உயர்வால் பயனாளர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
0
0