தமிழகத்தில் கார், பைக்குகளின் விலை உயருகிறது… பழைய வாகனங்களுக்கு பசுமை வரி… தமிழக அரசின் புதிய உத்தரவு..!!!

Author: Babu Lakshmanan
12 October 2023, 9:56 pm
Quick Share

போக்குவரத்து துறை தொடர்பான மசோதாவில் தமிழக அரசு மாற்றம் செய்த நிலையில், தமிழகத்தில் கார், பைக்குகளின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துத் துறை தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். அதில், அனைத்து வாகனங்களுக்கான வரி விதிப்பு முறைகளில் திருத்தம் செய்யப்பட்டுருந்தது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, வாடகை மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900மாகவும், 35 நபர்களுக்கு மேல் பயணிக்கும் வாகனங்களுக்கு 3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயக்கப்படும் பிரத்யேக பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களுக்கான வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. பள்ளி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பேருந்துகளுக்கும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை இருக்கும் புதிய இருசக்கர வாகனங்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வரையும், அதற்கு மேல் இருந்தால் 18 முதல் 20 சதவீதம் வரை வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல் பழைய வாகனங்களுக்கும் 8 முதல் 10 விழுக்காடு வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது தவிர 15ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு பசுமை வரியாக 5 ஆண்டுகளுக்கு 750 ரூபாயும், மற்ற மோட்டார் வாகனங்களுக்கு 1,500 ரூபாயாகவும், சாலை பாதுகாப்பு வரியாக இருசக்கர வாகனங்களுக்கு 375 ரூபாயும், இலகுரக வாகனங்களை தவிர்த்து மற்ற வாகனங்களுக்கு ரூ.3,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 337

0

0