லாட்டரி அதிபர் மார்ட்டினை சுற்றி வளைக்கும் ED… கோவை, சென்னையில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை..!!

Author: Babu Lakshmanan
13 October 2023, 10:31 am
Quick Share

லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரில் உள்ள வெள்ளக்கிணறு பிரிவு மற்றும் காந்திபுரத்தில் உள்ள லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான நான்கு இடங்களில் 20க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சாதனையை நடத்தி வருகின்றனர். நான்கு இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகரில் வெள்ளக்கிணறு பிரிவில் மார்ட்டின்க்கு சொந்தமான வீடு உள்ளது. மார்ட்டின் குழும நிறுவனங்களின் கார்ப்பரேட் அலுவலகம் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளது. கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டர் மில்ஸ் பகுதியில் மார்ட்டின் ஹோமியோபதி கல்லூரி செயல்பட்டு வருகிறது. காந்திபுரம் பகுதி 6வது தெருவில் மற்றொரு அலுவலகம் செயல்பட்டு வந்தது.

கோவை மாநகரில் 4 இடங்களில் நேற்று காலை 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனையை தொடங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு லாட்டரி மார்ட்டினுக்கு சொந்தமான ரூ.451.07 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ள நிலையில், ஜூலை 2019ல், மார்ட்டினும் மற்றவர்களும் லாட்டரி ஒழுங்குமுறைச் சட்டம், 1998 இன் விதிகளை மீறுவதற்கும், சிக்கிம் அரசை ஏமாற்றி தவறான ஆதாயத்தைப் பெறுவதற்கும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கூறியது.

மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் (தற்போது பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீசஸ் (பி) லிமிடெட்) மூலம் மார்ட்டினுக்கும் சிக்கிம் அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நேர்மையற்ற முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.

விற்பனை வருமானம், சிக்கிம் மாநிலத்தின் பொதுக் கணக்கில் விற்பனைத் தொகையை அனுப்பாததன் மூலம் தங்களுக்குத் தவறான ஆதாயத்தைப் பெறுவதற்காகவும், கேரளாவில் சிக்கிம் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதன் மூலம் அதைப் பெறவும், PMLA இன் கீழ் விசாரணையில் மார்ட்டின் மற்றும் அவரது கூட்டாளிகள் சட்டவிரோதமாக ஏப்ரல் 2009 முதல் ஆகஸ்ட் 2010 வரையிலான காலக்கட்டத்திற்கான பரிசு வென்ற டிக்கெட்டுகளின் கோரிக்கையை உயர்த்தியதன் மூலம் 910.3 கோடிகள் வருமானம் ஈட்டியதாக சொல்லப்படுகிறது.

மார்ட்டின் தனது லாட்டரி வியாபாரத்தில் இருந்து சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை 40 நிறுவனங்களின் பெயரில் அசையா சொத்துக்களை வாங்குவதற்கு முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 279

0

0