இன்னும் ஜெய் பீம் படம் பார்த்து உருகும் CM ஸ்டாலின்… திமுக ஆட்சியில் தொடரும் லாக்கப் மரணங்கள்… வைரலாகும் கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கேலி சித்திரம்..!!

Author: Babu Lakshmanan
15 June 2022, 10:32 am
Quick Share

தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து கார்ட்டூனிஸ்ட் பாலா வெளியிட்டுள்ள கேலி சித்திரம் வைரலாகி வருகிறது.

திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் சிறை மரணங்கள் தடுக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்நிலையத்தில் விக்னேஷ் என்பவரும், திருவண்ணாமலை கலால் காவல்நிலையத்தில் தங்கமணி என்பவரும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிறையிலேயே உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, சாத்தான்குளம் காவல்நிலைய இரட்டை கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், அடுத்தடுத்து நிகழ்ந்த லக்-அப் மரணங்கள் போலீசாரின் மீது பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.

சென்னையில் 54 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற விசாரணை கைதி உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்த 2 நாட்களில், ராஜசேகர், சுப்பிரமணியன் ஆகிய இரு விசாரணை கைதிகள் பலியான சம்பவம் தமிழகத்தையே குலை நடுங்கச் செய்துள்ளது. இது தமிழக அரசியல் கட்சிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், முதலமைச்சர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டிருப்பது ஆளும் திமுகவுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

லாக்கப் மரணங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் கருத்துக்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா கேலி சித்திரம் தற்போது வைரலாகி வருகிறது.

ஜெய் பீம் படத்தை பார்த்து விட்டு சிறை மரணங்கள் குறித்து உருக்கமாக கருத்து வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியில், லாக் மரணங்கள் தொடர்ந்து வருவதை குறிப்பிடும் வகையில் சித்திரம் வரைந்துள்ளார்.

அதோடு, அவர் விடுத்துள்ள பதிவில், “திராவிட மாடல் விடியல் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி வருகின்றன. முதல்வர் இன்னும் ஜெய் பீம் படம் பார்த்து உருகி கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கிறார். போராளிக் குழுக்கள் ஆப் லைன் மோடிலே வைக்கப்பட்டிருக்கின்றன,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 874

0

0