தமிழகத்தில் தொடரும் கனமழை…சாலைகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம்: மீண்டும் மழை எச்சரிக்கை..!!

Author: Rajesh
19 May 2022, 12:49 pm
Quick Share

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் 4வது நாளாக தொடர் மழை பெய்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதன்நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. தொடர்ந்து நான்காவது நாளாக மழை பெய்து வருவதால், பயிர்கள் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நன்காவது நாளாக இரவு நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Views: - 507

0

0