ஆசை வார்த்தை சொல்லி 17 வயது சிறுமியுடன் குடித்தனம்… போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது செய்த போலீசார்..!!

Author: Babu Lakshmanan
20 May 2022, 4:16 pm
Quick Share

சென்னை : ஆசை வார்த்தை கூறி 17 வயது சிறுமியை அழைத்து சென்று குடும்பம் நடத்திய நபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

சென்னை பெரம்பூர் மடுமா நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் அளித்திருந்தார். அதில் தனது 17 வயது மகளை வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் ( எ) ராஜேஷ் (30) என்ற நபர் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதன் பேரில் போலீசார் சிறுமியை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்பொழுது ராஜேஷ் தலைமறைவாகி விட்டார்.

இந்நிலையில், தொடர்ந்து அவரை தேடி வந்த நிலையில் வேலூர் மாவட்டம் சதுப்பேரி கிராமத்தில் வைத்து அவரை பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 494

0

0