ஈவு இரக்கமற்ற மனிதர்… மனசாட்சியே இல்லையா? ஏ. ஆர் ரஹ்மானை விளாசும் ரசிகர்கள்!

Author: Rajesh
5 December 2023, 1:59 pm
ar rahman
Quick Share

இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் என்று அழைக்கப்படும் ஆஸ்கார் நாயகன் சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழராக உலகளவில் புகழ்பெற்ற இசைக்லைஞராக திகழ்ந்து வருகிறார். இந்தி, தமிழ், மலையாளம் போன்ற மொழிப்படங்களில் பணியாற்றியுள்ள இவரது தந்தையும் இசையமைப்பாளர் தான்.

சிறுவயது முதலே இசைக்கருவிகள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளதால் அவருடைய தந்தையிடமிருந்து பல நுணுக்கங்களைக் கற்றுத் தெரிந்துக்கொண்டு பின்னர் மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் 1992ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானார்.

மெல்லிய இசையால் முதல் படத்திலே ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர். ரஹ்மானுக்கு அப்படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் அவருக்கு தமிழ் மீதுள்ள பற்று அளவுக்கடந்தவை. பொதுமேடையில் கூட இந்தி மொழியை பலமுறை நிராகரித்து இருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் அதெல்லாம் வெறும் நாடகமா என கேள்வி எழுப்பும் அளவிற்கு ஏ. ஆர். ரஹ்மானின் நடத்தை ரசிகர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், சென்னை மாநகரமே வரலாறு காணாத வகையில் வெள்ளத்தால் மூழ்கி கிடைக்கும் நேரத்தில் அது குறித்து எந்த ஒரு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்காத ரஹ்மான் தான் இசையமைத்த இந்தி பாடல் ஒன்றின் போஸ்டர் வெளியிட்டு ப்ரோமோஷன் செய்துள்ளார்.

இதை பார்த்த தமிழ் மக்கள் உங்களுக்கு ஈவு இரக்கமே இல்லையா? தமிழ், சென்னை என பேசினால் மட்டும் போதாது, கொஞ்சமாவது மக்களின் நிலைமையை நினைக்க வேண்டும் என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளனர்.

Views: - 97

0

0