சூப்பர் ஸ்டாருக்கு அலர்ஜியான 5 விஷயங்கள்.. பல அவஸ்தைகளை கடந்து வந்த ரஜினி..!

Author: Vignesh
1 August 2023, 6:45 pm
rajini - updatenews360
Quick Share

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது.

rajinikanth

இதனிடையே, ரஜினிகாந்த் வளர்ந்து வந்த காலத்தில் சில விஷங்களை கண்டு கூச்சப்பட்டும் பயப்பட்டும் இருந்திருக்கிறார். அது என்ன விஷயங்கள் என்று தற்போது பார்க்கலாம்.

அதாவது, ரஜினிகாந்த் மீடியாவை பார்த்தாலே என்ன பேசணும் என்று தெரியாத நிலையில், முக்கால்வாசி பத்திரிக்கையாளர்களை நிராகரித்து விடுவாராம். மேலும், மேடைகளில் லட்சக்கணக்கான ரசிகர்கள் முன் நின்று பேசுவது என்றால், மிகவும் நடுக்கத்துடன் மற்றும் மனதிற்குள் பதற்றம் ஆகவும், படபடப்பாகவும் இருப்பாராம்.

rajinikanth

அதற்கு காரணம் என்ன பேசணும் எப்படி பேசணும் என்று இவருக்கு தெரியாததால் இதை நினைத்து பல நேரங்களில் சிரமப்பட்டு இருக்கிறாராம். அப்படிப்பட்ட இவருடைய பேச்சு தற்போது ரசிகர்கள் பிரமித்து பார்க்கிற அளவுக்கு இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால் இவருக்கு ஸ்டேஜ்ல ஏறினாலே பயம் வந்துவிடுமாம். கை கால் எல்லாம் நடுங்கி இருக்கிறதாம். இதனை அடுத்து இவருடைய படங்களில் அனைவரும் ரசித்துப் பார்ப்பது சண்டை காட்சிகள் தான். அப்படிப்பட்ட இந்த காட்சிகளில் சக நடிகர்களை அடிப்பது போல் காட்சி இருந்தாலே மனதிற்குள் பதற்றத்துடன் கை கால் எல்லாம் உதறுமாம்.

Rajinikanth-updatenews360

அடுத்ததாக ரஜினிக்கு போடப்படும் மேக்கப் தான் குறிப்பாக மேக்கப் போட்டுக் கொண்டு இவருக்கு நீண்ட நேரம் இருப்பது அலர்ஜியை உண்டாக்குமாம். அதனாலயே, இதை கண்டு பயப்படும் அளவிற்கு எரிச்சல் பட்டிருக்கிறார். இப்படி இவர் ஹீரோவாக வளர்ந்து வந்த காலங்களில் பல அவஸ்தைகளை கடந்து வந்த நிலையில், தற்போது இது அனைத்திற்கும் முடிவு கட்டும் விதமாக எல்லாத்தையும் துரத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 340

0

0