ரோகினி தியேட்டரில் நடந்த கொடுமை குறித்த கேள்வி – பளார்னு அறைஞ்ச விஜய் சேதுபதி?

Author: Shree
31 March 2023, 11:20 am
vijay sethupathi
Quick Share

சிம்பு நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் பத்து தல. கிருஷ்ணா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மணல் மாஃபியாவை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் சிம்பு ஏஜிஆர் என்கிற டான் கேரக்டரில் நடித்துள்ளார்.

தமிழகம் முழுக்க சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியிடப்பட்டது. இதையடுத்து பத்து தல படம் பார்க்க குழந்தை குட்டிகளுடன் வந்த நரிக்குறவர் சமூகத்தினரை சென்னையில் ரோகினி திரையரங்க ஊழியர்கள் தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்றும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தீண்டாமை , இனவெறி, சாதி உள்ளிட கோணத்தில் இந்த விவகாரம் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து இது குறித்து விளக்கம் அளித்த ரோகிணி திரையரங்கு உரிமையாளர் பன்னீர்செல்வம், பத்து தல படம் U/A சான்றிதழ் பெற்றுள்ளதால் அவர்கள் குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் அவர்களை படம் பார்க்கவும் அனுமதித்து வீடியோ வெளியிட்டனர். இருந்தாலும் அவர்கள் கூறும் சாக்குப்போக்கை மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. 10 வயசில் ரஜினியின் தர்பார் படம் பார்க்க அவரது பேரன்களை மட்டும் அனுமதிக்கலாமா? என விவாதங்கள் எழுந்தது.

இந்நிலையில் இது குறித்து ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று விஜய் சேதுபதி முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அப்போது ரோகினி திரையரங்க சர்ச்சை குறித்து கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ‘எங்கேயும் எப்போதும் இன்னொரு மனிதன் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த பூமி அனைத்து மனிதர்களும் ஒன்றாக வாழ்வதற்கு படைக்கப்பட்டுள்ளது. அதில் வேற்றுமையை யார் எந்த வகையில் செய்தாலும் ஏற்க முடியாது’ என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதில் சம்மந்தப்பட்ட ரோகினி திரையரங்க ஊழியரை பளார் என்று அறைந்தது போல் உள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Views: - 4236

55

11