“எனக்கு இன்னொரு பெயர் இருக்கு”.. ஆர்யா போட்ட ட்வீட்… அடுத்தடுத்து ரியாக்ட் பண்ணும் பிரபலங்கள்..!

Author: Vignesh
9 December 2022, 11:30 am
arya-updatenews360
Quick Share

கடந்த 2013 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் குட்டிப்புலி திரைப்படம் மூலம், இயக்குனராக அறிமுகம் ஆனவர் முத்தையா. இதன் பிறகு, ‘கொம்பன்’ திரைப்படத்தை கார்த்தியை வைத்து இயக்கி இருந்த முத்தையா, தொடர்ந்து விஷாலை வைத்து ‘மருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

கார்த்தி – முத்தையா கூட்டணியில் சமீபத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான விருமன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. விருமன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் முத்தையா அடுத்து நடிகர் ஆர்யாவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சிதி இத்னானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

arya-updatenews360

சிதி இத்னானி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த வெந்து தணிந்தது காடு படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கிராமம் சார்ந்த கதைக் களம் தான் முத்தையா இயக்கும் படங்கள் அனைத்திலும், இடம்பெற்றிருக்கும். ‘அவன் இவன்’ உள்ளிட்ட ஒருசில கிராமத்து பின்னணி கொண்ட படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, தற்போது முத்தையாவுடன் கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

மேலும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார். ஜி ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு ‘காதர்’ என தலைப்பிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

arya-updatenews360

இந்நிலையில் நடிகர் ஆர்யா, தனது டிவிட்டர் பக்கத்தில், “ஆர்யா என்ற ஜம்ஷெத். எனக்கு இன்னொரு பெயர் இருக்கு. உங்க இன்னொரு பெயர் என்ன பாஸ்?” என ட்வீட் செய்து, நடிகர்கள் விஷால், கார்த்தி, மாதவன், ஜீவா, சந்தானம், விஷ்ணு விஷால், கலையரசன், வெங்கட் பிரபு, இயக்குனர் பா. ரஞ்சித், அருண் விஜய், ஜி.வி. பிரகாஷ் குமார், சிவா, யோகி பாபு, பரத், ஷாம் ஆகியோரை டேக் செய்துள்ளார்.

இதற்கு வெங்கட் பிரபு, சந்தானம், கார்த்தி, விஷ்ணு விஷால் ஆகியோர் பதில் அளித்துள்ளனர். குறிப்பாக நடிகர் கார்த்தி ஜப்பான் என்று பதில் அளித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Views: - 126

2

0