விரைவில் திருமணம்?.. பிரபாஸ் குறித்து மவுனம் கலைத்த அனுஷ்கா..!
Author: Vignesh9 September 2023, 7:15 pm
நல்ல அழகு, திறமையான நடிப்பு என ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் வசீயம் செய்து வைத்திருப்பவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. கர்நாடகாவை சேர்ந்தவரான இவர் யோகா டீச்சராக தனது கெரியரை துவங்கினார். அதன் பின்னர் பின்னணி பாடகியாக சினிமாவில் நுழைந்தார். அதன் பின்னர் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடித்து வருகிறார்.
2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் -நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படம் தான். அதன் பின்னர் 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். இதுவரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் கவர்ச்சி தாராளமாக காட்டி நடித்த அனுஷ்கா அருந்ததி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்புத்திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு கவர்ச்சியை ஏறகட்டிவிட்டு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அருந்ததி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த அவர் வரலாற்று வெற்றி திரைப்படமான பாகுபலி படத்தில் நடித்து உலகம் முழுக்க பிரபலம் ஆனார். அந்த படத்தில் நடித்தபோது பிரபாஸ் உடன் காதல் வயப்பட்டு சில வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்கள்.
இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று மீடியாக்களில் தகவல்கள் வெளியானது. ஆனால் இது குறித்து அனுஷ்கா மற்றும் பிரபாஸ் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற அனுஷ்கா நடிகர் பிரபாஸ் உடன் மீண்டும் ஒன்றாக இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டதற்கு இந்த முடிவு என் கையில் எதுவும் இல்லை. எங்களது ஜோடியை ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். இதற்கு காரணம் அந்த கதையம்சம் மற்றும் படத்தொகுப்பு போன்றவைத்தான் என்று கூலாக பதில் அளித்து இருந்தார். மேலும், திருமணம் குறித்து கேள்வி கேட்டதற்கு, 41 வயதான நடிகை அனுஷ்கா உண்மையாகவே இதற்கு எந்த பதிலும் என்னிடமும் இல்லை. அது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும் அதற்கென்று நேரம் இருக்கிறது. அப்போது இயல்பாக நடக்கும் என்று சிரித்தபடியே பதில் அளித்துள்ளார்.