“அவருக்காக எல்லாமே செஞ்சேன்…” நிர்கதியாய் நிற்கும் பிரபல சீரியல் நடிகை – காதல் கணவரால் அரங்கேறிய கொடூரம்?.. நடந்தது என்ன?
Author: Vignesh6 October 2022, 12:13 pm
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நைனா முகமத். இவர் தமிழ் சீரியல்
சேனல்களில் நடிகராக நடித்து வருகிறார். இதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் நடிகை திவ்யா, சென்னை புரசைவாக்கத்தில் தங்கி மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.
கேளடி கண்மணி என்ற சீரியல் தொடரில் நடிக்கும் போது நைனா முகமது உடன் நடிகை திவ்யாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, காதல் ஆகி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, இஸ்லாமிய முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தை பதிவும் செய்துள்ளனர்.
இந்த நிலையில், நடிகை திவ்யா தமிழ்நாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், தன் காதல் கணவன் தன்னை அடித்து சித்திரவதை செய்து வருவதாகவும், தங்களுடைய திருமணம் குறித்த புகைப்படம் மற்றும் சான்றிதழ்களை வெளியிட்டதால் நைனா முகமது தன்னை தாக்கியதாகவும், தான் பாதுகாப்பாற்ற சூழ்நிலையில் இருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022
இதற்கிடையே சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் நடிகை திவ்யா திருமணத்திற்கு பின் சிக்கி சீரழிக்க பட்டுவிட்டதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஃலவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை திவ்யா
— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) October 6, 2022
வீடியோ வெளியிட்டு ஆதரவு கேட்கிறார். pic.twitter.com/DxyUY7HuyT