மஞ்சிமா மோகன் வெளியிட்ட போட்டோ கமெண்ட் செய்த ஐஸ்வர்யா தனுஷ் !! ??

Author: kavin kumar
17 February 2022, 4:37 pm
Manjima Mohan
Quick Share

நடிகை மஞ்சிமா மோகன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 2015ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்து மலையாளத்தில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானார். தமிழில் 2016ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்த “அச்சம் என்பது மடமையடா” திரைப்படம் தான் இவரது முதல் தமிழ் படம்.

மலையாள படங்களுக்கு இவரது தந்தை ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1998 முதல் 2002 வரை நடித்து இருக்கிறார். இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். தற்போது தமிழில் மூன்று திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் மஞ்சிமா மோகன் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பிறகு துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்தார். இப்போது இவர் நடித்து முடித்த FIR படம் Release ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவரும், நடிகர் கவுதம் கார்த்திக்கும் காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் செய்யப்போவதாக இணையதளத்தில் பலதரப்பட்ட கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மஞ்சிமா மோகன் தற்போது உடல் எடை கூடி அமுல் பேபி போல இருக்கிறார் , மஞ்சிமாவின் இந்த உடல் எடையை பார்த்து நிறைய ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். சிலர் மஞ்சிமா இனிமேல் அக்கா ,அண்ணி , அம்மா கதாபாத்திரத்தில் தான் நடிக்க முடியும் என்றெல்லாம் கிண்டலடித்து வருகின்றனர். அதனையெல்லாம் கண்டுகொலாமல் பச்சை சுடிதார் அணிந்து கிளாமர் இல்லாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரஜினிகாந்தின் முத்த மகள் ஐஸ்வர்யா “my pretty” என்று கமெண்ட் செய்துள்ளார் . அதற்கு மஞ்சிமா மோகன் ” love youu mam ” என்று கமெண்ட் செய்துள்ளார்.

Views: - 1545

35

3