58 வது பிறந்தநாளை அமர்க்களமாக கொண்டாடிய நதியா – இளமை மாறா அழகிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

Author: Shree
25 October 2023, 5:39 pm
nadhiya
Quick Share

80 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து எல்லா heroineகளுக்கு எல்லாம் வயிற்றில் புளியை கரைத்து அழவிட்டது நடிகை நதியா. இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் வலது காலை எடுத்து வைத்தார்.அதனை தொடர்ந்து 90 களில் பல படங்களில் ஹுரோயினாக முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதன் பிறகு திருமணம் செய்து செட்டிலாகினார்.

அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த நதியா மீண்டும் தமிழில் M குமரன் படம் மூலம் ரி என்ட்ரி கொடுத்து இப்போ வரை ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அன்று முதல் இன்று வரை இவரின் இளமை கூடி காணப்படுவதால் அவரின் அழகின் ரகசியம் குறித்து பலரும் அவரிடம் கேட்டு நச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் இன்று நதியா தனது 58 வது பிறந்தநாளை தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட ” உங்கள் அருகில் உள்ளவர்களுடன் கொண்டாடுவது எப்போதுமே சிறப்பானது. நேற்றைய அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கும், அற்புதமான வீடியோக்களுக்கும் அனைவருக்கும் நன்றி என கூறி பதிவிட்டுள்ளார். இதையடுத்து இளமை மாறா அழகிக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Views: - 342

1

1