விஜயகாந்த்தை அவமானப்படுத்திய பிரபல தமிழ் நடிகை.. பிரபல நடிகர் சொன்ன தகவல்..!

Author: Udayachandran RadhaKrishnan
29 January 2023, 7:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் கேப்டனாக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரெச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். அந்த வகையில், இவருடன் உடன் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து படத்திலிருந்து பிரபல நடிகை விலகிய சம்பவத்தை பிரபல நடிகர் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார்.

Vijayakanth - Updatenews360

80களில் பிரபலமான நடிகையாக ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போதும் இளமையுடன் காட்சி அளிக்கும் இவர், பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று அவருடன் நடிக்க நதியா மறுத்திருக்கிறார் என பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள தகவலில், நடிகை நதியாவிற்கு கருப்பு நடிகர்கள் என்றால் பிடிக்காது. உடனே நீங்கள் கேட்கலாம்.. நடிகர் ரஜினிகாந்த் கருப்பு தானே ஆனால் அவருடன் சேர்ந்து நடித்தார் என்று. நடிகர் ரஜினிகாந்த் நடிகைகளுடன் பட்டும்படாமலும் தொட்டும் தொடாமலும் தான் நடிப்பார்.

அவருக்கு தன்னுடைய படங்களில் கொச்சையான காட்சிகள் இல்லாமல் பார்த்து கொள்வார். ரஜினிகாந்த் உடன் கட்டிப்பிடிப்பது உரசுவது முத்தம் கொடுப்பது உள்ளிட்ட காட்சிகள் இருக்காது. மேலும் சினிமாவின் முன்னணி நடிகர் அவருடைய படத்தில் நடிக்க மறுத்தால் உன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என நடிகை நதியாவை உருட்டி மிரட்டி நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

மேலும் நடிகர்களுடன் உரசுவது முத்தம் கொடுப்பது கட்டிபிடிப்பது படுக்கையறை காட்சிகள் இது போன்றவற்றில் நடிகை நதியா நடிக்க மாட்டார். இதனால் தான் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக இவர் கடைசி வரைக்கும் நடக்கவில்லை. ஏனென்றால் கமலஹாசன் படங்கள் என்றால் கண்டிப்பாக ஹீரோயின் உடன் ஒரு முத்தக்காட்சி அல்லது ரொமான்ஸ் காட்சியாவது இருக்கும்.

ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை நதியா. நான் கமலஹாசன் உடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னது உண்மைதான். ஆனால், அப்போது எனக்கு கால் சீட் இல்லாத காரணத்தினால் தான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று மழுப்பலான பதிலை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 467

3

11