“பூஜா குமாரா இது..? Weight போட்டு அடையாளமே தெரில.. !

Author: Rajesh
25 March 2022, 5:57 pm
Quick Share

அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் கமல்ஹாசன் அவர்களையே சேரும். கடந்த 2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான காதல் ரோஜாவே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார்.அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

அதன் பின் அவரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளர்.

அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான உத்தமவில்லன் படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் கூடவே தோன்றுகிறார்.

கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லியோ தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன், 4 பிரபல பாலிவுட் இயக்குனர்கள் இயக்கும் Anthology படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பெயர் Forbidden Love, பிரியதர்ஷன், அனுராக் காஷ்யப், அனிருத் ராய் சௌத்ரி, பிரதீப் சர்கார் என 4 தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் இயக்கி உள்ளார்கள். இதில் பூஜாகுமாரின் படத்தை பிரியதர்ஷன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் பூஜா தனது கணவனோடு சந்தோஷம் வேறு ஒரு வாலிபனோடு சந்தோஷம் காண்கிறார். அவரோடு லிப்லாக் முத்த காட்சியில் கூட நடித்த காட்சி செம்ம வைரல்.

இந்நிலையில், குழந்தை பிறந்து பின்பு இப்பொழுது தான் முதன் முறையாக பொதுவெளியில் தோன்றியுள்ளார் பூஜா குமார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகிய நிலையில், அதில் உடல் எடை கூடி காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், பூஜா குமாரா இது..? நம்பவே முடியலையே.. என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Views: - 417

0

0