அந்த இடத்தில் தொட்டு ஷகிலாவிடம் அத்துமீறிய மருத்துவர்… அம்மா கூட இருக்கும்போதே கொடுமை!

Author: Shree
15 July 2023, 7:46 pm
shakila dp
Quick Share

ஆபாச படங்களில் முகம் சுளிக்கும் அளவிற்கு நடித்து பிரபலமானவர் நடிகை ஷகிலா. இவர் மோசமான படுக்கையறை காட்சிகள் கவர்ச்சி நடனம் என தமிழ் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் இரவு நேரத்தை இன்பமாக்கினார். இவர் தன் 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் மலையாளம் , தமிழ் என பல்வேறு அடல்ட் திரைப்படங்களில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். அத்துடன் குடும்ப ரசிகைகளின் வெறுப்பையும் சம்பாத்தித்து வைத்தார். இருந்தாலும் 90களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார்.

அதன் பின்னர் இவரது அடையாளத்தையே மாற்றியது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி. அந்நிகழ்ச்சியில் மூலம் ஒரு புதிய அவதாரம் எடுத்த ஷகிலா தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் கவர்ந்தார். தொடர்ந்து நிகழ்ச்சி நடுவராக இருந்து வருகிறார். தொடர்ந்து பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், ” நான் ஒரு முறை என் அம்மாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது டாக்டர் எழுதிய மருந்து சீட் என புரியவில்லை. இதனால் மீண்டும் மருத்துவரிடம் சென்று கேட்டதற்கு, அவர் திடீர் என எனது பக்கத்தில் வந்து தொடரக்கூடாது இடத்தில் தொட்டார். இதனால் கோபம் அடைந்து நான் அங்கேயே அந்த மருத்துவரை அறைந்தது மோசமாக திட்டிவிட்டேன். இதில் கொடுமை என்னவென்றால் என் அம்மா அருகில் இருக்கும்போதே எனக்கு இப்படி ஒரு கொடுமை நடந்தது என கூறி அவர் வேதனை அடைந்தார்.

Views: - 328

0

0