அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர்… சமீரா ரெட்டி பீல்டு அவுட் ஆனதுக்கு காரணம் இந்த பிரபலமா?

Author: Shree
24 July 2023, 6:14 pm
sameera reddy
Quick Share

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், 2008 ஆம் ஆண்டு சூர்யா இரட்டை வேடங்களில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்த திரைப்படத்தின் மூலம் ஹிந்தி நடிகை சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுவரை பாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருந்த சமீரா ரெட்டி, தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து அதிகளவு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படங்களும் ஓடவில்லை, அஜித்துடன் நடித்த அசல் உட்பட.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என Pan Indian நடிகையாக வலம் வந்த சமீரா Reddy கடந்த 2014 ஆம் ஆண்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு Bye சொன்ன இவர் இல்லற வாழ்க்கையில் பிஸியானார். இவருக்கு இரண்டு குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் சமீரா ரெட்டி ஹிட் படங்களில் நடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே பீல்டு அவுட் ஆகிவிட்டார். அதற்கு காரணமே அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் தானாம். ஆம், மீடூ பிரச்சனை பூதாகரமா வெடித்தபோது தனக்கு யார் யாரெல்லாம் டார்ச்சர் கொடுத்தார்கள் என புட்டு புட்டு வைத்தார்களாம். அந்த சமயத்தில் சில பெரிய பெரிய பிரபலங்களே சமீரா ரெட்டிக்கு போன் செய்து தங்களின் பெயர்களை சொல்லவேண்டாம் என மிரட்டினார்கள் என செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Views: - 504

1

0