ஆக்‌ஷன் ஹீரோயினாகும் மாயா.. பொம்பள ஜாக்கி சானா இருப்பாங்க போல…!

Author: Vignesh
12 January 2024, 1:08 pm
Maya-S-Krishnan
Quick Share

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தவர் மாயா S கிருஷ்ணன். போல்டான போட்டியாளராக ஆரம்பத்தில் இருந்தே தனது கருத்துக்களை ஆழமாக பதிவு செய்து வந்த மாயா குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

maya s krishnan- updatenews360

இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான “வானவில் வாழ்க்கை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.o திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். அதன் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ஒரு விலை மாதுவாக நடித்தார். அந்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்த்தது.அத்தோடு அதிக அளவில் அவர் விமர்சிக்கவும்பட்டார்.

Maya-S.-Krishnan

தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திலும் இவர் ஒரு நல்ல கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். மேலும் விரைவில் வெளியாக உள்ள நடிகர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் இவர் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.

maya s krishnan- updatenews360

பிக்பாஸில் மக்கள் வெறுக்கத்தக்க போட்டியாளராக இருந்து வரும் மாயாவின் குடும்ப புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வைரலானது. இந்நிலையில், மோசமான வரவேற்பை நிகழ்ச்சியில் பெற்றிருந்தாலும் தற்போது, பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் டாப்பில் இடம் பிடித்துள்ளார் மாயா. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மாயா ஹீரோயின் ஆகப் போகிறார் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Maya-S-Krishnan

அதாவது, மாவீரன் ஜவான் ஆகிய படங்களில் ஆக்சன் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த Yannick Ben என்பவரின் இயக்கத்தில் புதிய படம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த படத்தில், மாயா ஆக்சன் ஹீரோயினாக அறிமுகமாக போகிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் பொம்பள ஜாக்கி சானா இருப்பாங்க போல என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 205

0

0