ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய டாப் நடிகர் – வைரலாகும் Tweet பதிவு!

Author: Shree
13 May 2023, 8:53 pm
aishwarya jaresh
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் டஸ்கி ஸ்கின் அழகை கொண்டு ஹீரோயினுக்கு ஏத்த பார்முலாவையே மாற்றி எழுதி யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார். இவர் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு… நிகழ்ச்சித் தொகுப்பாளராக முதலில் தனது பணியை ஆரம்பித்தார். கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதை அடுத்து, நீதானா அவன் படத்தில் நடித்து அறிமுகமானார்.

அட்டகத்தி திரைப்படம் தான் இவரை பிரபலமாக்கியது. அதன் பின்னர் வடசென்னை, காக்கா முட்டை, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் , தர்மதுரை உள்ளிட்ட திரைப்படங்கள் அவரது கெரியருக்கு மைல் கல்லாக அமைந்தது. சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து சொப்பன சுந்தரி திரைப்படம் வெளியாகியது.

இந்நிலையில் சோலோ ஹீரோயினாக முசுலீம் பெண்ணாக நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் தான் ஃபர்ஹானா. இப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இப்படத்தில் முஸ்லீம் கலாச்சாரத்தை இழிவுபடுத்தும் வகையில் கொச்சையான காட்சிகளில் நடித்தது மட்டும் இல்லாமல் ஆபாச காட்சிகளில் நடித்து இஸ்லாமிய பெண்களை இழிவுபடுத்தியுள்ளதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் தடா அப்துல் ரஹீம் என்பவர் புகார் அளித்திருந்தார். மேலும் இப்படத்தை வெளியிடக்கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்புகள் வெளியானது.

குடும்ப வறுமை காரணமாக வேலை பார்க்கும் இடத்தில் அதிக சம்பத்திற்கு தோழிகளின் அறிவுறுத்தலின் படி வழிமாறி செல்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், அங்கு அவருக்கென்று ஒரு பெரிய பிரச்சினை காத்திருக்கிறது . அதில் இருந்து அவர் எப்படி வெளி வருகிறார்? பிரச்சனையை ஐஸ்வர்யா ராஜேஷ் கணவர் எப்படி கையாண்டார்? இதனால் அந்த வேலைக்கு ஏதாவது பிரச்சனை வந்ததா? என்பதே மீதி கதை. இதற்கு பல திரைப்பிரபலங்கள் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது இது குறித்து நடிகர் கார்த்தி ட்விட் பதிவு செய்துள்ளார். அதில் அவர், பொருளாதாரம் தொடர்பு, தொழில்நுட்பம் போன்றவை குடும்ப உறவில் பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது. இப்படி ஒரு நிலையில் அதற்கு எதிரான படமாக தான் ஃபர்ஹானா இருக்கிறது. அதற்கு இந்த விவகாரத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இந்த படம் கையாண்டிருக்கிறது.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜித்தன் ரமேஷ், செல்வராகவன், கிட்டி ஆகியோருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இயக்குனருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு ஆகியோர் நன்றி தெரிவித்து பதில் ட்விட் போட்டு இருக்கிறார்கள்.

  • Wayand Shruti இப்படி ஒரு பெருந்துயரம் யாருக்கும் வந்துவிடக்கூடாது.. நிலச்சரிவும்.. விபத்தும் : உருக்குலைந்த கேரளப் பெண்!!
  • Views: - 808

    5

    1