ஷாலினியின் கையை அறுத்த அஜித்… கொட்டிய ரத்தம் – காதல் ஆழமானது இப்படித்தான்!

Author: Shree
2 June 2023, 3:36 pm
ajith shalini
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் அஜித் ஷாலினியின் காதல் குறித்து ஸ்வாரஸ்யமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார். ஷாலினியும் , அஜித்தும் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தான் காதலிக்க துவங்கினார்கள்.

இப்படத்தில் நடிக்க முதலில் ஷாலினி நடிக்க மறுத்துள்ளார். நான் மேற்படிப்பு படிக்கப்போகிறேன். நடிக்க போவதில்லை என இயக்குனரிடம் கூறியதும் அஜித் உடனே ஷாலினிக்கு போன் செய்து நான் தான் உங்களுக்கு ஹீரோவா நடிக்கிறேன் என கூறினாராம். ஷாலினி அஜித்தின் தீவிர ரசிகை என்பதால் 2 நாட்கள் கழித்து யோசித்து சம்மதம் சொல்லியிருக்கிறார். அதன் பின்னர் படப்பிடிப்பு ஆரம்பித்திருக்கிறது.

அஜித் இப்படத்தின் ஆரம்பித்தில் இருந்தே ஷாலினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அதை மறைமுகமாகவும் வெளிப்படுத்தினராம். அப்போது ஒரு முறை ஷூட்டிங்கில் ஷாலினியை கையை அறுக்கும் ஒரு காட்சியில் தெரியாமல் கத்தி பட்டு உண்மையிலே அறுத்துவிட்டாராம் . இதனால் மொத்த படக்குழுவும் பதற, அஜித் கத்தி ஷாலினியின் கையை பிடித்து கதறி அழுத்துவிட்டாராம். அந்த நேரத்தில் அஜித்தின் அலாதி அன்பை பார்த்த ஷாலினி நம் மீது இவ்வளவு காதல் வைத்திருக்கிறாரே என அவரை காதலிப்பதாக கூறினாராம். இப்படிதான் அஜித் – ஷாலினி காதல் மலர்ந்துள்ளது.

Views: - 174

0

1