கோயிலில் சாமி தரிசனம் செய்த அஜித்.. இணையத்தில் வெளியான புகைப்படங்கள் செம வைரல்..!

Author: Rajesh
31 March 2022, 10:37 am
Quick Share

தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி வழியை தேர்தெடுத்து அதன்படி நடப்பவர் தான் நடிகர் அஜித். 2 வருடங்கள் காத்திருப்புக்கு பிறகு இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம், அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இதனையடுத்து, அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. அதன் படி ஏகே 61 படத்தினை வினோத்துடன் தான் கைகோர்க்கிறார் அஜித், இந்தப் படத்தினையும் போனி கபூர் தயாரிக்கிறார்.அடுத்தபடியாக 62 படம் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைக்கிறார் அஜித். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

சமீபத்தில் ஏகே 61 படத்திற்கான பூஜை நடந்து முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜித் தனது குடும்பத்துடன் வெளியே சென்று உணவு அருந்திய புகைப்படங்கள் வந்தன. பின் தனது மனைவியுடன் அவர் எடுத்த போட்டோவும் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில், தற்போது கேரளாவில் உள்ள ஒரு பிரபலமான கோவிலுக்க சென்றுள்ளார் அஜித். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைலாகியுள்ளது.

Views: - 761

4

0