கிளாமரா நடிச்சா நடிகைகள் வண்டி ஓட்டலாம்.. அஜித் இப்படி பேசுவாருன்னு நினைக்கல.. அப்செட் ஆன ரசிகர்கள்..!

Author: Vignesh
20 November 2023, 1:45 pm
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

ajith-updatenews360

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், அஜித் நடிக்க வந்த புதிதில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். நடிகைகள் கிளாமர் வைத்து சர்வே பண்ணலாம். நடிகர்கள் எப்படி என்று தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த அஜித், நீங்கள் சொல்வது சரிதான் ஆனால், நடிகைகள் கிளாமர் வைத்து கொஞ்ச நாட்களே சர்வே செய்ய முடியும். நடிகர்கள் கண்டிப்பாக நடித்து தரவேண்டும் என்று பேசியுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி வைரலாகி வருகிறது.

Views: - 140

0

0