அஜித் எப்போதும் கேட்கும் பாட்டு இது தான்… காரில் பயணிக்கும்போது ஷாலினி வெளியிட்ட வீடியோ!

Author: Shree
29 June 2023, 7:10 pm
ajith
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான அஜித் 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னோடியான காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் அமர்க்களம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்தபோது முதலில் அஜித் காதலிக்க துவங்கி பின்னர் ப்ரோபோஸ் செய்துள்ளார்.

முதலில் கொஞ்சம் தயங்கிய ஷாலினி பின்னர் தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து அவருடன் நெருங்கிப் பழக ஆரம்பித்து பின்னர் காதலிக்கு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் இருவரும் இளம் ஜோடிகளாக வலம் வந்தனர். அதன் பிறகு பெற்றோர் சம்மதத்தின் படி கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ajith-updatenews360

அஜித் தொடர்ந்து டாப் ஹீரோவாக இருந்து வருகிறார். ஷாலினி அஜித்தை ஆரம்ப காலத்தில் பார்த்து பழகியது போல் இன்றும் காதலித்து வருகிறார். இந்நிலையில் அஜித் எப்போதும் கேட்கும் பாடல் இது தான் என கூறி ஷாலினி அஜித்துடன் காரில் பயணிக்கும்போது வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த பாடல் அஜித் நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான பவித்ரா படத்தில் இடம்பெற்ற ” உயிரும் நீயே உடலும் நீயே ‘ என்ற அம்மா செண்டிமெண்ட் பாடல் தான் அது. ஷாலினி வெளியிட்ட வீடியோ இதோ:

Views: - 457

3

1