அப்போ.. அரவிந்த் சாமி வளர்ப்பு பிள்ளையா..? உண்மையை சொல்லி அதிர வைத்த சீரியல் நடிகர்..!
Author: Vignesh5 September 2023, 12:15 pm
அரவிந்த்சாமியின் அழகில் மயங்காத பெண்களே கிடையாது என்று கூறும் அளவுக்கு எவர் கிரீன் ஹீரோவாக இன்றளவும் திகழ்ந்து வருகிறார். இவர் முன்னதாக பொழுதுபோக்கிற்காக மாடல் துறையில் நுழைந்தார். முதன்முதலாக இவர் நடித்த காபி விளம்பரத்தை பார்த்த இயக்குனர் மணிரத்தினம் தளபதி படத்தில் பெரிய ஸ்டாராக வலம் வந்த ரஜினியின் தம்பியாக நடிக்கும் அதிர்ஷ்டத்தை கொடுத்தார்.
இதனிடையே, ஆண் அழகன் அரவிந்த் சாமி சாக்லேட் பாய் ஆக பம்பாய் படத்தின் மூலமாக அத்தனை பெண் ரசிகர்களையும் வளைத்து போட்டார். இவர் 1991ம் ஆண்டு தளபதி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து ரோஜா, மின்சார கனவு, அலைபாயுதே, என் சுவாசக் காற்றே, தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ரோஜா, பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்கள் இவரது புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.
கதாபத்திரங்கள் தேர்வு செய்வதில் அதிகம் கவனம் செலுத்தும் அவர் வெகுசில படங்களிலேயே நடித்திருந்தாலும் அவரது திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. குறிப்பாக இவர் நடித்த ரோஜா மற்றும் பம்பாய் திரைப்படம் மாநில, தேசிய விருதுகளை பெற்றுத் தந்தது.
இவர் காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு 16 வருடத்திற்கு பிறகு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அபர்ணா முகர்ஜி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவருக்கு ருத்ரா,ஆதிரா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு நடிகர் அரவிந்த்சாமி குறித்து பல சுவாரசியமான தகவல்களை வெளியிட்டுள்ளார். நிறைய சீரியல்களில் நடித்த நடிகரான டெல்லி குமார் தான் அரவிந்த்சாமியின் தந்தை என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அரவிந்த்சாமியின் தந்தை வி.டி.சுவாமி தான் இவர் பெரிய தொழிலதிபர் என்றும், இவருடைய மனைவி ஒரு பரதநாட்டிய கலைஞர் என்றும், இவருடைய வளர்ப்பு மகன்தான் அரவிந்தசாமி என்று தெரிவித்து இருந்தார்.
மேலும், செய்யாறு பாலு இது குறித்து அரவிந்த்சாமி யாரிடமும் சொன்னதும் கிடையாது அரவிந்த்சாமி பிறந்ததும் டெல்லி குமார் அவருடைய உறவினரான வி.டி.சுவாமியிடம் தத்து கொடுத்து விட்டார் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக அரவிந்த்சாமி தனது சொந்த வாழ்க்கை குறித்து யாரிடமும் வெளிப்படையாக பேசியதில்லை என்று பேட்டியில் செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார்.
சீரியல் நடிகர் டெல்லி குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அரவிந்த்சாமி குறித்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, அரவிந்த்சாமி தன்னுடைய மகன்தான் என்றும், அவர் பிறந்த உடனே அவரை தன் மனைவியின் அக்காவுக்கு தத்து கொடுத்துவிட்டோம் என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் அரவிந்த்சாமி என் மகன் தான் அவரைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் உண்மை தான். அதில், மாற்றுக்கருத்து ஏதுமில்லை என்று டெல்லி குமார் தெரிவித்துள்ளார்.