ஜாதியை நோண்டிட்டு இருக்காதீங்க…” ஓ மை கடவுளே” மாதிரி படம் பண்ணுங்க – அப்செட்டில் அசோக் செல்வன் பதில்!

Author: Rajesh
4 February 2024, 3:55 pm
blue star
Quick Share

நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் , உள்ளிட்ட படங்களில் நடித்து பெரிதாக வரவேற்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்தார். அதன் பிறகு ஓ மை கடவுளே திரைப்படம் அவருக்கு மாபெரும் ஹிட் கொடுத்தது. அந்த படத்தில் நடித்த நடிகை ரித்திகா சிங்குடன் அவர் கிசுகிசுக்கப்பட்டார். இருவரது கெமிஸ்ட்ரியும் படத்தில் நன்றாக ஒர்கவுட் ஆகியிருந்தது.

இவர்கள் நிஜத்தில் காதலித்தால் கூட சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அசோக் செல்வனுக்கு பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துக்கொண்டார். கீர்த்தி பாண்டியனின் சொந்த ஊரான திருநெல்வேலியில் இயற்கை சார்ந்த முறையில் நடைபெற்ற இத்திருமணம் பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த ஜோடி இணைந்து ப்ளூ ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர். அந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில் ரசிகர் ஒருவர் அந்த படத்தை குறித்து விமர்சித்துள்ளார். அதாவது, ‘ஜாதிய விட்டு கொஞ்சம் வெளிய வந்து தொலைங்கபா… அது தானா மாறுது, சும்மா அதையே நோண்டிட்டு இருக்காதீங்க. ஓ மை கடவுளே’ மாதிரி படம் பண்ணுங்க என கூற…. இதற்கு பதில் அளித்த அசோக் செல்வன் ‘ ஓ மை கடவுளே படத்தை பார்த்ததற்கு நன்றி. ஆனால், இப்படி தெரியாமல் விமர்சிப்பதற்கு முன் நீங்கள் படத்தை பார்க்க வேண்டும். இந்த உலகத்தின் அமைதிக்கு ஒற்றுமை தான் ஒரே வழி. நீங்களும் இதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்று பதில் அளித்துள்ளார்.

ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் காலனி தெரு பையனாக அசோக் செல்வனும், ஊர் தெரு பயனாக சாந்தனுவும் நடித்திருக்கிறார்கள். ஜாதி பிரச்சனை மட்டும் பேசாமல் இரு ஜாதிக்காரர்கள் ஒன்று சேர்ந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் எடுத்து கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 232

0

0