மரண சோகத்தில் இருந்த உயிர் நண்பன்… 500 காருடன் வந்து நின்ற விஜயகாந்த் – பிரபலத்தின் கண்ணீர் பேட்டி!

Author: Rajesh
4 February 2024, 2:26 pm
vijayakanth thiyagu
Quick Share

மதுரை மாவட்டம் விருதுநகரில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ந் தேதி பிறந்தவர் தான் விஜயகாந்த். இவரது நிஜப்பெயர் விஜயராஜ் சினிமாவிற்காக விஜயகாந்த்தாக மாறினார். தமிழ் சினிமாவில் எந்த சினிமா பின்புலமும், சிபாரிசும் இல்லாமல் தங்களது கடின உழைப்பின் மூலம் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகர் விஜயகாந்த். பின்னர், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் தனி இடத்தையும் தமிழ் திரையுலகில் பெற்றார்.

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னர் ரைஸ் மில் நடத்திக்கொண்டிருந்த விஜயராஜ், சினிமாவிற்காக விஜயகாந்தாக மாறினார். திறமையான நடிகராக கோலிவுட்டில் கேப்டனாக வலம் வந்த விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் தான். நடிகர் – நடிகைகளுக்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் முன்வந்து உதவி செய்து நேரம் பாராமல் திரைத்துறைக்காக பணியாற்றியவர். யார் மனதையும் நோகடிக்காது, அனைவர்க்கும் நியாயமாக சமமாக நடந்து கொள்வதில் மிகுந்த கவனமாக இருப்பவர் விஜயகாந்த்.

பெரிய நடிகர், சீனியர் நடிகர் என்ற வித்தியாசம் பாராமல் அனைவரது நிறை குறைகளை அனுசரித்து வேண்டியதை செய்து கொடுத்து வந்தவர். இவரால் பலன் பெற்றவர்கள், பிரபலம் அடைந்தவர்கள் ஏராளம். உடல்நலம் சரியில்லாமல் திரையுலகு மற்றும் அரசியல் பொதுப்பணிகளிலும் பெரிதும் ஈடுபடாமல் இருந்து வந்த விஜய்காந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தால் ரசிகர்கள், தொடர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் தங்களது ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கோடானகோடி மக்கள் மத்தியில் கேப்டன் உடல் ஊர்வலமாக கொண்டுச்சென்று அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் விஜயகாந்தின் நெருங்கிய உயிர் நண்பரான தியாகு பேட்டி ஒன்றில் விஜயகாந்த் உடனான நட்பு குறித்து கண்கலங்கி பேசினார். அதாவது, என் அம்மா இறந்தபோது சுமார் 500 கார்களுடன் என் வீட்டிற்கு வந்து நலன் விசாரித்தார். கவலைப்படாதேடா நான் இருக்கேன் உனக்கு என இரண்டு மணி நேரம் என் வீட்டில் அமர்ந்து ஆறுதல் கூறினார். அப்போது சாலையெங்கும் ட்ராபிக் ஆகிவிட்டது. உடனே SP வந்து சார் ட்ராபிக் ஆகிவிட்டது சார் வண்டி கொஞ்சம் எடுங்க என்று சொன்னதும்… கேப்டன் கோப்பட்டு யோவ்! என் உயிர் நண்பன்… துக்கம் விசாரிக்க வந்திருக்கேன். எடுக்கமுடியாது. போய் யார்கிட்ட சொல்லணுமோ சொல்லுப்போ என கூறினார். பின்னர் நான் தான் அவருக்கு எடுத்து சொல்லி அனுப்பிவைத்தேன் என கூறினார் தியாகு.

Views: - 236

0

0