கையில் பத்து ரூபாயுடன் சென்னைக்கு வந்த இளையராஜா…. வாய்ப்பு தேடி தெருத்தெருவா அலைந்த கொடுமை!

Author: Shree
22 July 2023, 12:20 pm
ilayaraja dp
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார். வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம்.

ஆனால் அவர் இந்த புகழின் உச்சத்தை அடைய ஏவ்வளவு துன்பத்தை அனுபவித்தார் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம். இளையராஜா சினிமாவில் வருவதற்கு முன்னர்,தனது மூத்த சகோதர் பாவலர் வரதராஜன் நடத்திய பாவலர் க்ரூப்ஸ் என்ற இசை குழுவை நடத்திக்கொண்டிருந்தார். அந்தக் குழுவில் இளையராஜா இசை வாசிப்பாளராக இருந்தார்.

அந்த குழுவில் இருந்தவர்கள் சினிமாவிற்கு செல்லலாம் என முடிவெடுத்து பாரதிராஜாவின் உதவியுடன் சென்னைக்கு சென்றார்களாம். அப்போது இளையராஜா தன் கையில் வெறும் 10 ரூபாய் மட்டும் தான் கொண்டுவந்தாராம். அப்போது பாரதிராஜா தி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகிய நான்கு பேர் தங்கியுள்ளனர்.

ஆனால் ஆட்கள் அதிகமாக இருப்பதாக கூறி அவர்களை வீட்டு ஓனர் காலி செய்து அனுப்பிவிட்டாராம். பின்னர் எங்கு சென்றாலும் அந்த 4 பேரும் ஒன்றாகவே வாய்ப்புகள் தேடி அலைந்து சினிமாவில் நுழைந்து அவரவர் திறமையை காட்டி பெரிய நட்சத்திரங்களாக உயர்ந்துவிட்டார்கள். இந்த பழைய பிளாஷ்பேக் கதையை பாரதி ராஜா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Views: - 555

1

0