ரீல்ஸ் வார்த்தை யூஸ் பண்ணா என்ன தப்பு..? ஜிபி முத்து ஒண்ணும் தாமரை மாதிரி இல்லை.. தனலட்சுமியை வெளுத்து வாங்கிய வனிதா..!

Author: Vignesh
15 October 2022, 2:45 pm
vanitha-vijaykumar_updatenews360
Quick Share

பிக் பாஸ் வீட்டிற்குள் ஜி.பி.முத்துவிற்கும், தனலட்சுமிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு வரும் நிலையில், வாக்குவாதத்தில் இருவரும் மாற்றி மாற்றி ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆயீஷாவை பாத்திரம் கழுவும் அணியின் கேட்பான் ஜனனி தனது அணியில் இருந்து ஜி.பி. முத்துவிற்கு பதிலாக ஸ்வாப் செய்துகொண்டார்.

இதனால், ஜி.பி.முத்து வீட்டிற்கு வெளியே உள்ள கார்டன் ஏரியாவில் நேற்று இரவு முழுவதும் உறங்கினார்.

Bigg boss_updatenews360 g


இந்நிலையில், ஜி.பி.முத்துவை தனலட்சுமிக்கு பதிலாக ஜனனி ஸ்வாப் செய்துகொண்டுள்ளார். இதன்முலம் வீட்டிற்கு வெளியே சென்று உறங்கும் நிலைமை தனலட்சுமிக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியாக அமர்ந்து தனலட்சுமி அழுகிறார்.

தனலட்சுமி ஸ்வாப் அடுத்து, எபிசோடில், ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை போட்டது குறித்து பேசிய டீம் லீடர் ஜனனி, பெரியவர்கள் வயதானவர்கள் அனைவரும் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.

bigg boss day4_updatenews360

இதில் வயதில் பெரியவர்கள் வா.. போ என்று பேசுவது தப்பான விஷயம் இல்லை. இதை பற்றி பெரிதாக நாம் எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. இது ஒன்றும் ரீல்ஸ் இல்லை இதனால், தனலட்சுமியை ஸ்வாப் செய்வதாக ஜனனி கூறினார். ஜனனியின் பேச்சால் கடுப்பான தனலட்சுமி, மற்ற போட்டியாளர்களிடம் ரீல்ஸ் போடுவதைப் பற்றி ஜனனி ஏன் பேசவேண்டும் என பஞ்சாயத்தை கூட்டினார்.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய வனிதா விஜயகுமார், ஜிபி முத்துக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் அதுவே மிகப்பெரிய விஷயம்.

bigg boss day4_updatenews360

அது மட்டுமில்லாமல் தாமரை மாதிரி எனக்கு ஒன்னும் தெரியாது, தெரியாதுனு சொல்லாமல் ஜிபி முத்து தெளிவாக இருக்கிறார். ஜிபி முத்து காமெடியனாக மட்டும் இல்லை, புத்திசாலியாகவும் இருக்கிறார்.

ஜனனி ரொம்ப தெளிவாக பேசியிருந்தார். இது ரீல்ஸ் இல்லை பிக் பாஸ் வீடு என்று சொன்னதில் எந்தவிதமான தப்பும் இல்லை, நானா இருந்தாலும் அப்படித்தான் பேசியிருப்பேன். இந்த விஷயத்திற்கு போய் தனலட்சுமி இவ்வளவு கலாட்டா பண்றது, அழுவது எல்லாமே நாடகம்.

ரீல்ஸ் வார்த்தை யூஸ் பண்ணது தப்பான விஷயமே இல்லை என நடிகை வனிதா கூறியுள்ளார்.

Views: - 351

0

0