இரு வீட்டருக்கும் முற்றும் பகை.. கடும் மோதலுடன் வெளியான ப்ரோமோ வீடியோ..!

Author: Vignesh
12 October 2023, 10:45 am
bigg boss 7 tamil-updatenews360
Quick Share

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், இன்று பிக் பாஸ் வீட்டில் நடக்க உள்ள மோதல் குறித்து முதல் பிரமோ வெளியாகி உள்ளது. இதில் பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கு சாப்பாடு செய்து கொடுக்க முடியாது நாங்கள் அனைவரும் ஸ்ட்ரைக் செய்கிறோம் என ஸ்மால் பாக்ஸ் வீட்டில் உள்ள நபர்கள் முடிவு எடுக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் பிக் பாஸ் வீட்டில் உள்ள நபர்கள் உணவுப் பொருட்களை திரும்ப எடுத்துக் கொள்கிறார்கள். இது எங்கு போய் முடிகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 292

0

0