ஷெரினாவிடம் காண்டம் கேட்டாரா பிக்பாஸ் வின்னர் அசீம்..? வெளியான பகீர் தகவல்

Author: Babu Lakshmanan
23 January 2023, 6:48 pm
Quick Share

5 சீசன்களை வெற்றிகரமாக கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றுடன் நிறைவு பெற்றது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ஜனனி, ராம், ஆயிஷா, தனலட்சுமி, மணிகண்டன், ரச்சித்தா ஆகியோர் பல்வேறு காலங்களில் அடுத்தடுத்து வெளியேறினர். அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று பேர் மட்டும் இறுதி போட்டிக்கு முன்னேறினர்.

முன்னதாக, 11.75 லட்சம் ரொக்கத்துடன் அமுதவாணன் பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியில் வெளியேறினர். இதையடுத்து, மைனா நந்தினியும் வெளியேற்றப்பட்ட நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, விக்ரமன் 2வது இடத்தையும், ஷிவின் 3வது இடத்தையும் பிடித்தனர்.

இந்த சீசனில் ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரிய போட்டியாளராக அசீம் தான் இருந்து வந்தார். இதுவரை நடைபெற்ற நாமிநேஷன்களில் ஒவ்வொரு முறையும் அதிக வாக்குகளை பெற்றும், அவர் காப்பாற்றப்பட்டது எப்படி என்று கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இருப்பினும், அசீம் ஒரு ஆக்ரோஷமான போட்டியாளராக கருதப்பட்டார்.

அடிக்கடி எதாவது பேசி சர்ச்சையில் சிக்கிகொள்வதை வாடிக்கையாக வைத்து வந்தார் அசீம். என்னதான் கமல் அடிக்கடி அறிவுரை கூறி வந்தாலும் வார இறுதிக்கும் பின் மீண்டும் தனது அடாவடி தனத்தை தொடர்ந்து வந்தார் அசீம். அதேவேளையில், பிக்பாஸ் வீடாக இருந்து வந்தாலும் தனது உண்மையான குணத்தை வெளிக்காட்டுவதாக இவருக்கு ஆதரவும் கிடைத்து வந்தது.

இப்படியிருக்கையில், அண்மையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டிருந்தனர். அப்போது, ஒரு எபிசோடில் உள்ளே வந்த ஷெரினாவிடம், அசீம், அசல் கோளாறு ஆகியோர் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது, ஷெரினாவிடம் ‘உங்க boyfreindஐ பார்க்க வரும் போது, எதையயோ எடுத்து வர மாட்டியா’ என்று அசீம் கேட்டிருந்தார். இதனை கேட்ட அசல் கோளாறு கூட முகம் சுழித்து, Oh Shit என்று சொல்ல, ஷெரினா ‘நான் எதுவும் கேட்கவில்லை’ என்று காதை மூடிக்கொண்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர, ஷெரினாவிடம் Condom தான் அசீம் கேட்டார் என்றும், ஒரு பெண்ணிடம் என்ன கேட்பது என்று விவஸ்தை வேண்டாமா என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தனர்.

அதில், நெட்டிசன் ஒருவர், ஷெரினாவிடம் தனிப்பட்ட முறையில் மெசேஜ் செய்து, உங்களிடம் அவர் காண்டமா கேட்டார் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஷெரினா ‘நானும் அந்த வீடியோவை பார்த்தேன், அவர் என்னிடம் சிகிரட் தான் கேட்டார்.’ என்று கூறியுள்ளார்.

இது தொடர்பான சாட்டிங் ஸ்கீரின்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 444

2

1