விஜய் சேதுபதியை கேலி செய்த பாலிவுட் நடிகர்கள் – பொதுநிகழ்ச்சியில் பட்ட அவமானம்!

Author: Rajesh
11 January 2024, 6:42 pm
vijay sethupathy
Quick Share

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

தற்போது பாலிவுட்டில் பிரபல நட்சத்திர நடிகையான கத்ரீனா கைப்பிற்கு ஜோடியாக marry christmas என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக பங்கேற்று வரும் விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் பாலிவுட் சினிமாவில் அசிங்கப்படுத்தப்பட்டதை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

vijay sethupathi - updatenews360

அதாவது, நான் பாலிவுட் திரை பிரபலன்களால் மிகவும் ஏளனமாக பார்க்கப்பட்டேன். நான் பொது நிகழ்ச்சிகளுக்கு சாதாரண உடை , செருப்பு என அணிந்து சென்றதால் அங்குள்ளவர்களால் கிண்டல் செய்யப்பட்டேன் என கூறியுள்ளார். பொதுவாக விஜய் சேதுபதி எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் மிகவும் சாதாரணமாக செல்வது குறிப்பிடத்தக்கது.

Views: - 211

0

0