திரையில் பார்க்கிறது புலி.. நிஜத்துல காகித புலி.. சூர்யாவின் உண்மை முகத்தை வெளிக்காட்டிய பிரபலம்..!

Author: Vignesh
28 August 2023, 3:15 pm

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

surya updatenews360

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிரபல பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சூர்யா குறித்து பேசி உள்ளார். அதில், முக்கியமான ஹீரோக்கள் பல ஹீரோக்களுடைய முகம் இதுதான். அவங்களையெல்லாம் வானவில் மாறி பாத்துரனும், திரையில் பாக்குற ஹீரோக்கள் வேற, நிஜத்துல பார்க்குற ஹீரோக்களின் முகம் வேறு, இதே சூர்யா மும்பையில் வந்து தன் குழந்தைகளோட மும்பை ஏர்போர்ட்டில் இறங்குகிறார். அங்கு இருக்கிற மீடியாக்கள் எல்லாம் படம் எடுக்கிறது. குழந்தைகளை போட்டோ எடுக்காதீங்க எடுக்காதீங்க என்று கூறிய சூர்யா, நான் தான் சொல்றேன் இல்ல.. போட்டோ எடுக்காதீங்க என்று சட்டென்று கோபப்பட்டு விட்டார்.

surya updatenews360

இப்படி இருக்கிற இவரு, கீழடிக்கு காலையில பத்து மணிக்கு தான் அனுமதி இவர் 9:00 மணிக்கு அங்க போயிட்டு வெயில்ல குழந்தைகள் மட்டும் இல்ல சார் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் அவ்வளவு பேரும் இருக்காங்க என்ன காரணம் என்று தெரியவில்லை. மீடியாக்கள் எதுவுமே, யாருமே கண்டனம் தெரிவிக்கல, இதுல ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வேற கைடு மாதிரி அவங்களுக்கு சுத்தி காட்டுகிறார். திரையில பாக்குறதுக்கு புலி ஆனா நிஜத்துல இவங்க காகிதப்புலி என்று சூர்யாவின் உண்மை முகத்தை செய்யாறு பாலு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 527

    0

    0