அந்த அழகு நடிகை ஆர்யாவுக்கு மாமியாரா.. வெளிச்சத்துக்கு வந்த சாயிஷாவின் குடும்ப உறவு முறை..!

Author: Vignesh
27 February 2024, 5:54 pm
Arya
Quick Share

இளம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஆர்யா கட்டுமஸ்தான உடல் தோற்றம், மிரட்டலான body language என ஆரம்பத்தில் வில்லனாக நடித்து பரீட்சியமனார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டு முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார்.

2005ஆம் ஆண்டு விஷ்ணுவர்த்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், சிக்கு புக்கு, வேட்டை, சேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், ஆரம்பம், சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ படத்தில் கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு ஓடினாலும் பெரிதாக பேசப்படவில்லை. அந்த படத்திற்காக ஆர்யா ரூ.14 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஆர்யாவுக்கு சார்பட்டா பரம்பரை படத்திற்கு பின்னர் தான் சம்பள உயர்வு ஆனதாக கோலிவுட் செய்திகள் கூறுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான எனிமி, கேப்டன், காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் போன்ற படங்கள் பெரிய தோல்வியை சந்தித்தது. சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்ய எங்க வீட்டு பிள்ளை என்ற நிகழ்ச்சியில், 18 பெண்களுடன் ரொமான்ஸ் செய்திருந்தார் ஆர்யா. ஆனால், கடைசில் யாரையும் திருமணம் செய்து கொள்ளாது சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து, தன்னுடன் நடித்த தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளையும் பெற்றெடுத்தார்.

 tabu

இந்த நிலையில், நடிகர் ஆர்யாவுக்கு நடிகை தபு மாமியார் முறை வருகிறதாம். படத்தில் கிடையாது நிஜத்தில் ஆர்யாவுக்கு மாமியாராம். அதாவது, சாயிஷாவின் அப்பா நடிகர் சுமீத் சாஹல், அவரது அம்மா ஷஹீன் பானு. 1990ல் சுமீத், சாயிஷாவின் அம்மாவை திருமணம் செய்து 2003ல் விவாகரத்து வாங்கிவிட்டார். இதனை தொடர்ந்து, சாயிஷாவின் அப்பா சுமீத் மனைவி ஷஹீன் பானுவை விவாகரத்து செய்து ஃபர்ரா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர் தான் ஆர்யாவுக்கு மாமியார் முறை என்றால் ஃபர்ராவின் அக்கா நடிகை தபுவும் அவருக்கு மாமியார் முறை தான். அப்படி ஆர்யா – சாயிஷாவின் உறவு முறையில் சாய்ரா பானு, சைஃப் அலிகானில் இருந்து ஆரம்பித்து ஹிருத்திக் ரோஷன், கரீனா கபூர் வரை அவர்களுக்கு சொந்தக்காரர்களாகிவிட்டார்களாம்.

Views: - 73

0

0