திறமைசாலிகளின் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் விஜய் மகன்.. லைகா தயாரிப்பில் இயக்குநராகும் சஞ்சய்..!

Author: Vignesh
28 August 2023, 5:15 pm
sanjay-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார்.

sanjay-updatenews360

இதனிடையே, இயக்குனரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் தான் விஜய். தற்பொழுது இவரது மகன் விஜய் உடைய மகன் என்ற அடையாளத்தோடு சமீபத்தில் சஞ்சய் ட்ரிகர் என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டு இருந்தார். தற்போது, சஞ்சய் சினிமாவில் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். அந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கு நெட்டிசன்கள் தமிழ் சினிமாவில் Nepotism இருப்பதாகவும், உண்மையான திறமைசாலிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள். Nepotism குழந்தைகளுக்கு வாய்ப்பை தராதீர்கள் என்று பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

Views: - 256

0

0