காவாலா பாடலுக்கு Vibe பண்ணும் WWE வீரர்.. தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் கிரேட் காளி..!(வீடியோ)

Author: Vignesh
5 August 2023, 6:45 pm
kaavaalaa-jailer-updatenews360
Quick Share

தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.

70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. முக்கியமாக திறமை இருந்தும் வாய்ப்பில்லாமல் தவித்து வந்த பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் போன்றோருக்கு ரஜினிகாந்தின் படங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி தந்தது.

பீஸ்ட் படத்தின் மூலம் நெகட்டிவ் ரிவியூஸ் பெற்ற நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படம் ஜெயிலர். இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் காவாலா என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆனது. இதில் தமன்னாவின் நடனம் அனைவரையும் கவர்ந்தது.

great-khali-updatenews360

இந்நிலையில், தற்போது பல முன்னணி திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் காவாலா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவிட்டு வரும் நிலையில், WWE வீரர் காவாலா பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டுள்ளார்.

Views: - 498

15

2