அட்டர் பிளாப் ஆன ரஜினி படத்திற்காக 2 சூப்பர் ஹிட் பட வாய்ப்பை நிராகரித்த கீர்த்தி சுரேஷ்.. வடபோச்சே..!

Author: Vignesh
17 February 2024, 6:21 pm
keerthy suresh - updatenews360
Quick Share

சினிமாவில் குறுகிய காலத்தில் வளர்ச்சி கிடைப்பது என்பது சாதாரணமான விஷயமல்ல. அப்படி கிடைத்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் குறுகிய காலத்தில் உச்சத்துக்கு சென்ற நடிகைகள் சில நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கட்டுப்பாடுகளை விதிப்பது இயக்குநர்கள், பட தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயம் என்றே கூறலாம்.

keerthy suresh

அப்படித்தான் முதல் படமே ஊத்திக்கிட்டாலும், வாரிசு நடிகை என்ற பெயர் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குறிப்பாக இவரது அழகும், வசீகரமும் தான் இவர் முன்னேற்றத்திற்கு காரணம்.

keerthy suresh

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன், விக்ரம்பிரபு என இளம் நாயகர்கள் உடன் நடித்தாலும், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலங்கு என அனைத்து மொழி முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து பிரபலமானார்.

keerthy suresh

மேலும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து தேசிய விருது தட்டிச்சென்றது மற்ற நடிகைகளிடம் சற்று பீதியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது ஒரு சில படங்களில் மட்டும் கமிட் ஆகியுள்ள நிலையில், தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவியுடன் இன்று கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது, நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

keerthy suresh

இந்த நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த நிலையில், போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. அதிகப்படியாக நெகட்டிவ் விமர்சனங்களே இப்படத்திற்கு வந்தது. இப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பூ, சூரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இருந்தும். படம் தோல்விதான் தழுவியது.

keerthy suresh

முன்னதாக, மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடித்திருந்த குந்தவை கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கீர்த்தி சுரேஷ். அந்த சமயத்தில், அண்ணாத்த படத்தில் நடித்து வந்ததால் கால்ஷிட் கொடுக்க முடியாமல் போன நிலையில், கீர்த்தி சுரேஷ் அந்த படத்தை தவற விட்டுள்ளார்.

keerthy suresh

அதேபோல், நானியின் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில், ஹீரோயினாக சாய் பல்லவி நடித்திருந்தார். திரைப்படத்தில் முதலில் கமிட்டானது கீர்த்தி சுரேஷ், ஆனால் கால்ஷிட் இல்லாததால் அந்தப் படத்திற்கும் அவர் நோ சொல்லிவிட்டாராம்.

sai pallavi

Views: - 296

0

0