“உன்ன கல்யாணம் பண்ணிட்டான்… என்ன பண்ணிட்டான்” காத்துவாக்குல ரெண்டு காதல் டிரைலர் வெளியானது..!

Author: Rajesh
22 April 2022, 7:37 pm
Quick Share

விஜய் சேதுபதி-நயன்தாராவின் மாறுபட்ட நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த திரைப்படம் தான் ‘நானும் ரவுடிதான்’ இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். மீண்டும் இந்த கூட்டணியை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கியுள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் மற்றும் லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 11-ம் தேதி வெளியானது. இதோடு இந்த படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்களும் செம ஹிட் கொடுத்தது.

இற்கிடையே இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பின் போதும் நயன்தாராவின் பிறந்தநாளின் போதும் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகின. அதோடு படத்தில் தான் நடித்த சீனை பார்த்து நயன்தாரா வெட்கத்தில் சமந்தாவை கட்டியணைக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இரு பிள்ளைகளுக்கு தாயான நயன்தார ஒருபுறமும், சமந்தா மறுபுறமும் என இருவரை காதலிக்கும் நாயகன் விஜய்சேதுபதி இறுதியாக யாரை கைப்பிடிப்பார் என்னும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த படத்திலிருந்து தற்போது டிரைலர் வெளியாகியுள்ளது.

Views: - 545

4

1