கனகாவுக்கு அந்த பயம் ஜாஸ்தி: வீட்டுக்கு கூட கூப்பிடல.. வேதனையை தெரிவித்த பிரபலம்..!
Author: Vignesh20 December 2023, 5:44 pm
நடிகை கனகா கரகட்டக்காரன் படத்தின் மூலமாக பட்டித்தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவரது தாய் இறந்த பின்னர் எப்படி நிலைகுலைந்து போனார் என்பது பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தற்போது பேசி உள்ளார்.
செய்யாறு பாலு பேசும் போது, “கரகாட்டக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் கனகாவிற்கு நாலாபுறமும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்த நிலையில், கனகாவை அவரது அம்மா தேவிகா தான் அரண் போல இருந்து பாதுகாத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
திடீரென்று கனனாவின் அம்மா ஒரு நாள் இறந்து போனதாகவும், கனகாவிற்கு அம்மா தான் பக்கபலமாக எல்லாமே. தேவிகாவின் மரணம் கனகாவை நிலைகுலைய செய்து விட்டதாகவும், கமிட் பண்ண படங்களுக்கு அவரால் சரியாக செல்ல முடியவில்லை என்றும், எந்த விஷயத்திலும் கனகாவால் முழுமையாக ஈடுபட முடியவில்லை. வீட்டிலேயே கனகா முடங்கி விட்டதாகவும், மீண்டும் ஒரு சில தயாரிப்பாளர்கள் கனகாவிற்கு வாய்ப்புக்கொடுத்து நடிக்க வைக்கிறார்கள்.
இருப்பினும் தாயாரின் நினைவிலிருந்து கனகாவால் மீண்டு வர முடியவில்லை என்பதால், திடீரென்று கனகா ஒரு நாள் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தன்னுடைய கணவர் பெயர் புருஷோத்தமன் என்றும் அவர் நியூயார்க்கில் இருப்பதாகவும் அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். உடனே பத்திரிகையாளர்கள் கணவரின் புகைப்படத்தை கேட்ட நிலையில், புகைப்படம் தர முடியாது என்று கனகா தெரிவித்துள்ளார்.
ஆனால் ஒரு கட்டத்தில் கனகா கூறியது முற்றிலும் பொய் என்பது தெரிய வந்தது. கனகா ஏன் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றும், தன்னை யாரும் நெருங்கி விடக்கூடாது என்பதற்காக அவர் அப்படி சொன்னாரா? இல்லை தன் பாதுகாப்பிற்காக ஒரு ஆள் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்காக அப்படி சொன்னாரா என்பது தெரியவில்லை என பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவிலிருந்து கனகா விலகியுள்ளார். தற்போது, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருகிறார். படத்தில் வாய்ப்பு இல்லை, காதல் ஒன்று கூடவில்லை. அப்பாவுடன் சொத்து பிரச்சனை என வீட்டிலேயே கனகா முடங்கியுள்ளார்.
இந்நிலையில், நடிகை குட்டி பத்மினி அளித்துள்ள பேட்டியில், கனகாவுடனான சந்திப்பிற்கு பிறகு கனகாவுக்கு நான் பலமுறை கால் மற்றும் மெசேஜ் செய்தோன். எதற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. என்னுடைய மெசேஜ்களை பார்த்தும் அதற்கு அவர் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை அப்படி யாரிடம் கனகா ஏமாந்தார் என்று தெரியவில்லை. இனியும் பழகினால் ஏமாந்து விடுவோமோ என அஞ்சுகிறார் என்று எனக்கு புரிகிறது.
கனகா தனிமையில் வாழ கற்றுக் கொண்டார். அந்த தனிமையை அவர் என்ஜாய் செய்கிறார். கனகாவுக்கு எந்த விதமான உதவியும் நான் செய்ய தயாராக இருக்கிறேன். அவர் ஒத்துழைத்தால் மட்டுமே, என்னால் அவருக்கு உதவ முடியும் என்றும் அவரை பேட்டி எடுக்கவும் முடியும் என்று குட்டி பத்மினி தெரிவித்துள்ளார்.
0
0