என் முகத்துல மட்டும் ஒரு தடவை அப்படி பண்றீங்களா ப்ளீஸ்? ரசிகரின் கேள்விக்கு நடிகை லட்சுமி மேனன் ரியாக்ஷன்!

Author: Vignesh
30 October 2023, 2:25 pm
Quick Share

கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை லட்சுமி மேனன் தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ள இவர் முதலில் 2011ல் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இப்படம் வசூல் ரீதியாக வெற்றியைத் தேடித்தந்தது. அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர். மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

lakshmi menon - updatenewse360

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் சந்திரமுகி 2வில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

சமீபத்தில், சந்திரமுகி 2 படத்தில் திவ்யாவாக நடித்து அனைவரையும் ஈர்த்தார். மலை, சப்தம் போன்ற படங்களில் நடித்து வரும் அவர், இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில், லைவ் சேட்டில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அதில் ஒரு நபர், ஒரு முறை என் முகத்தை உதைக்க விரும்புகிறீர்களா? என்று கேள்வி கேட்டு உள்ளார். அதற்கு லட்சுமி மேனன், முகத்தை சுளித்தவாறு கெட்டவார்த்தையில் திட்டி போர் அடிக்கும் அதே கேள்வி என்று தெரிவித்து இருக்கிறார்.

Views: - 393

2

0