ஆபாச வீடியோவை பதிவிட்ட லோகேஷ்?.. பதறிப்போய் கொடுத்த ஸ்டேட்மெண்ட்..!

Author: Vignesh
14 December 2023, 10:28 am
lokesh kanagaraj
Quick Share

கோவையை சேர்ந்த இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து கைதி படத்தை இயக்கை பெரிய கவனத்தை பெற்றார். இதன் பின்னர் விஜய்யுடன் சேர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கினார். படம் மாஸ் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மாறினார்.

lokesh-kanagaraj-1

அந்த வெற்றியை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். படம் மெகா ஹிட் அடித்து வசூல் சாதனை குவித்தது. இதையடுத்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. லியோ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில், “ஜி ஸ்குவாட்” என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி தனது முதல் பட வெளியீட்டிற்கு தயாராகி உள்ளார். உறியடி நாயகன் விஜய்குமார் நடிப்பில் உருவாகியுள்ள “Fight Club” என்ற படத்தை வரும் 15-ஆம் தேதி “ஜி ஸ்குவாட்” மூலமாக வெளியாக உள்ளது.

lokesh-kanagaraj-updatenews360

இந்நிலையில், தான் லோகேஷ் கனகராஜின் முகநூல் பக்கத்தில் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள லோகேஷ் கனகராஜ், தனக்கு இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் தளங்களில் மட்டுமே கணக்கு இருப்பதாக குறிப்பிட்டு, வேறு எந்த பக்கத்திலும் தனக்கு கணக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

Views: - 303

0

0