இவனுங்க கூட எல்லாம் இருக்க முடியாது.. நீ போய்ட்டா நானும் போயிருவேன்.. வெளிவந்த பிக் பாஸ் ப்ரோமோ..!

Author: Vignesh
13 October 2023, 9:45 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், மாயா மற்றும் பூர்ணிமா இருவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இந்த வாரம் நான் போய்டுவேன் என்று தோன்றுகிறது என பூர்ணிமா கூறுகிறார். நீ வெளியே போயிட்டா நானும் கிளம்பிடுவேன். இவனும் கூட எல்லாம் என்னால வாழ முடியாது என்று மாயா கூறுகிறார். இதன் பின் அடுத்த வாரம் ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் ஐஷூ கேப்டன் ஆகிவிட்டால் ஜோதிகா மற்றும் யுகேந்திரன் மற்றும் சில போட்டியாளர்களை வச்சு செய்யலாம் என பூர்ணிமாவிடம் மாயா கூறுகிறார். இந்த திட்டம் அடுத்த வாரம் நிறைவேறுமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Pushpa 2 Release and Reviews புஷ்பா 2 படத்தின் முதல் விமர்சனம்..பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
  • Views: - 376

    1

    0