நயன்தாராவை மிரட்ட வரும் மீரா ஜாஸ்மின்.. 40 வயதில் வில்லியாக ரீ என்ட்ரி கொடுக்கும் 90ஸ் கனவுக்கன்னி..!

Author: Vignesh
11 May 2023, 3:30 pm
meera jasmine - updatenews360
Quick Share

மீரா ஜாஸ்மின் தமிழ் பட திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். இவருக்கு தற்போது 40 வயதை கடந்துவிட்டது, இருந்தாலும் சிக்கென்று இருக்கிறார். இவருடைய Latest புகைப்படங்கள் எல்லாம் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

மீரா ஜாஸ்மின் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு என ஒரு ரவுண்டு வந்தார். இவர், விஜயுடன் புதிய கீதை, அஜித்துடன் ஆஞ்சநேயா, ரன், சண்டகோழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு, அதன் பிறகு கணவருடன் துபாயில் Settle ஆகிவிட்டார். அதன் பிறகு விவாகரத்து பெற்ற மீரா ஜாஸ்மின் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்ட நிலையில், இதை கண்ட சில ரசிகர்கள் மீரா ஜாஸ்மினை மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று விண்ணப்பித்து உள்ளார்கள்.

இந்தநிலையில், விக்ரம் வேதா மற்றும் மண்டேலா போன்ற படங்களை தயாரித்த, ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் மாதவன், நடிகை நயன் தாரா, சித்தார்த் உள்ளிட்ட நடிகர்கள் இணைந்திருக்கும் டெஸ்ட் படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

meera jasmine-updatenews360

மீரா ஜாஸ்மின் பல ஆண்டுகள் கழித்து மாதவன் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் , வில்லி ரோலில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நயன் லீட் ரோலில் நடிக்கும் நிலையில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியான மீரா ஜாஸ்மினும் கமிட்டாகியுள்ளது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

meera jasmine - updatenews360
Views: - 489

0

0