இதை தடவினால் வயசே ஆகாதாம்.. சீக்ரெட்டை வெளியிட்ட நயன்தாரா..! (வீடியோ)

Author: Vignesh
27 September 2023, 11:31 am
nayanthara-updatenews360 d
Quick Share

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் நயன்தாரா ஏற்கனவே லிப்பாம் கம்பெனி ஒன்றை வைத்துள்ளார், 9 ஸ்கின் என்ற ஸ்கின் கேர் கம்பெனி வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது டிவைன் ஃபுட்ஸ் என்ற இயற்கை சார்ந்த உணவுகளை தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்து தனது இரட்டை குழந்தைகளுக்கு மளமளவென சொத்து சேர்ந்து வருகிறாராம்.

View this post on Instagram

A post shared by 9 S K I N (@9skinofficial)

இதனிடையே, வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி ஆரம்பிக்கப்படும் நயன்தாராவின் புதிய தொழில் 9ஸ்கின் லோஷன் விளம்பரத்தில் Anti Ageing lotion எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கின் கேர் லோஷனை தடவி வந்தால் வயசே ஆகாதா? அது என்ன ஆன்ட்டி ஏஜிங்? என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by 9 S K I N (@9skinofficial)

Views: - 521

1

0