அந்த கொடூரனா? எனக்கு கல்யாணமே வேண்டாம்- நெப்போலியனை பார்த்து பயந்து ஓடிய மனைவி!

Author: Shree
28 May 2023, 4:13 pm
nepolean wife
Quick Share

நெப்போலியன் 1991ம் ஆண்டு வெளியான புது நெல்லு புது நாத்து திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஆறடிக்கும் மேல் உயரம், கம்பீரமான ராஜநடை, முறுக்கு மீசை என பக்கா கிராமத்து மெட்டீரியலாக திரையுலகில் அறிமுகமான நெப்போலியன், போலீஸ் கேரக்டர்களுக்கும் அம்சமாக பொருந்திப் போனார்.

நெப்போலியன் ஹீரோ, வில்லன் கெஸ்ட் ரோல் என வலம் வந்த ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்திருந்தார். நெப்போலியனுக்கு கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா போன்ற படங்கள் தரமான கம்பேக் கொடுத்தன. அதேபோல், நெப்போலியன் கமலுடன் விருமாண்டி, தசாவதாரம் படங்களிலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

இறுதியாக கார்த்தியுடன் நடித்த சுல்தான் திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனிடையே சினிமா, அரசியல் என பயணித்துக் கொண்டிருந்த நெப்போலியன், ‘ஜீவன் டெக்னாலஜிஸ்’ என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். நெப்போலியனின் ஐடி நிறுவனம் சென்னை, அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சென்று செட்டில் ஆனார்.

napoleon - updatenews360

பல வருடங்களாகவே அமெரிக்காவில் வசித்து வரும் நெப்போலியனின் தற்ப்போது யூடியூப் சேனல் ஒன்றிற்கு தனது திருமணம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அப்போது, நான் பெண் பார்க்க சென்ற போது என் மனைவி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.

மாப்பிள்ளை நான் என தெரியவந்ததும் நான் கல்யாணமே செஞ்சிக்கமாட்டேன் என என் மனைவி பிடிவாதம் பிடித்தார். காரணாம் எஜமான் படத்தில் அவர் வயிற்றில் இருந்த கருவுக்கே விஷத்தை வைத்த கொடூர வில்லன் என கூறி அழுதார். அதன் பின்னர் என் மாமனார் நான் நல்லா விசாரிச்சுட்டேன் அவர் படத்தில் தான் அப்படி நிஜத்தில் ரொம்ப நல்லவர் என கூறி ஒப்புக்கொள்ள வைத்தார்கள் என கூறினார். இதோ அவர் பேசிய வீடியோ லிங்க்:

Views: - 170

3

0