அஞ்சலி செலுத்த வந்த இடத்திலும் அயலான் Promotion’னா? சிவகார்த்திகேயனை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

Author: Rajesh
6 January 2024, 4:04 pm
vijayakanth sivakarthikeyan
Quick Share

கருப்பு வைரமாக திரைத்துறையில் முத்தான பல வசனங்கள் பேசி, உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி நடுத்தரவர்க்கத்தினர் முதல் மேலாதிக்க மக்கள் வரை அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்து சாதித்தவர் விஜயகாந்த். இவர் அரசியலிலும் தனது முத்திரையை பதிக்க 2005ஆம் ஆண்டு தேமுதிகவை தொடங்கினார். இதனையடுத்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டது தேமுதிக. விருத்தாசலம் தொகுதியில் மட்டும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்றார்.

vijayakanth-updatenews360

இதனையடுத்து தனது அரசியல் பேச்சால் மக்களை வெகுவாக கவர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகள் பெற்று காலம் காலமாக ஆட்சியை பிடித்துக்கொண்டிருந்த பெரிய அரசியல்வாதிகளுக்கே ஆட்டம் கொடுத்தார் கேப்டன். தொடர்ந்து அரசியலில் கொடிகட்டி பறந்த விஜயகாந்த் மிகவும் நேர்மையான தனது கருத்துக்களை ஆதங்கத்தோடும் , கோபத்தோடும் முன்வைத்து பெரிய அரசியல் புள்ளிகளின் வெறுப்பையும், சதிகளை சம்பாதித்து வளர்ந்த வேகத்தில் அரசியலில் சறுக்கலை சந்தித்துவிட்டார். அதன் பின்னர் அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போக சிகிட்சையிலே சில நாட்கள் ஓடியது.

sivakarthikeyan-updatenews360

பின்னர் சிகிச்சை பலனின்றி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். விஜயகாந்தின் மரணம் சரித்திரம் பேசும்படியாக கோடிக்கணக்கான மக்களின் அலைமோதிய கூட்டத்திற்கு மத்தியில் அடைக்கலம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள். தொடர்ந்து விஜயகாந்த் செய்த பல்வேறு நற்பணிகள், ஏழை எளிய மக்களுக்கு உதவிகள், திரைதுரைசேர்ந்த பலருக்கு வாழ்வளித்தது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.

மேலும், அவரது நினைவிடத்தில் பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் , மக்கள் என தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மகன்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக, சிலர் என்ன அயலான் படத்திற்கு ப்ரமோஷன் பண்ண இங்கயும் வந்திட்டீங்களா? உலகமகா நடிப்புடா சாமி என சிவகார்த்திகேயனை விமர்சித்து தள்ளியுள்ளனர்.

Views: - 277

0

0