அந்த படத்துக்கு அப்புறம் ஆளே மாறிட்டேன்.. கூச்சமின்றி ஒப்புக்கொண்ட நிவேதா பெத்துராஜ்..!

Author: Vignesh
25 மார்ச் 2024, 9:48 காலை
udhayanidhi stalin nivetha pethuraj
Quick Share

கடந்த சில வாரங்களாக சவுக்கு சங்கர் நடிகை நிவேதா பெத்துராஜ் மற்றும் உதயநிதியையும் வைத்து மிக மோசமாக பேசி வந்தார். இதற்கு நிவேதா பெத்துராஜ் மிகவும் மனம் நொந்து என்னை நிம்மதியாய் இருக்க விடுங்கள் என்று கெஞ்சியும் கேட்டுவிட்டார். ஆனால், அவற்றையும் மீறி சவுக்கு மீண்டும் அவரை சீண்டி வருகிறார்.

udhayanidhi stalin nivetha pethuraj

இந்த நிலையில், நிவேதா பெத்துராஜ் மற்றும் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்திருந்தபோது, இருவரும் பேட்டியளித்து இருந்தனர். அதில், நடிகை நிவேதா பெத்துராஜ் உதயநிதி எப்படி இருப்பார் என்று பேசியிருக்கிறார். அவர் என்னிடம் ஆட்டிட்யூட் காட்ட மாட்டார். மிகவும் கேரிங்காக இருப்பார் என்று கூறி இன்னுமாங்க உங்களுக்கு புரியவில்லை என்று வெட்கப்பட்டு பேசிய வீடியோ தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதற்கு உதயநிதியும் சிரித்தவாறு ரியாக்ஷன் கொடுத்திருப்பதை நெட்டிசன்கள் பலர் மீம்ஸ் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வந்தனர்.

சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சவுக்கு சங்கர் நிவேதா பெத்துராஜ் சம்பந்தமாக நான் கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் என்றும், என் மீது வழக்கு தொடரட்டும் என்றும், பகிரங்கமாக சவால் விடுத்து இருந்தார்.

nivetha pethuraj - updatenews360

இது ஒரு பக்கம் இருக்க நிவேதா பெத்துராஜ் ஆரம்பத்தில் அடக்கவெடுக்கமாக நடித்து வந்த பின்னர் படுமோசமான கவர்ச்சி ‘ரோடு கதாபாத்திரத்தில், நடித்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். இது குறித்து, நிவேதா பெத்துராஜ் அளித்த பேட்டியில் நான் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்து பின்னர் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடிக்க ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று நினைத்து சில படங்களில் நடித்தேன்.

nivetha pethuraj - updatenews360

உங்களின் சவுகரியம் எந்த அளவுக்கு இருக்கிறது என்று உங்களுக்கு புரிந்து விட்டால் நிச்சயம் உங்களால் எந்த மாதிரியான கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என்று நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு என் பெற்றோர்கள் அப்போது புரிந்து கொண்டார்கள் என்றும், நான் என் பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து படம் பார்க்கும் வகையில் தான் நடிப்பேன் என்றும், கவர்ச்சியும் அந்த அளவிற்கு தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 215

    0

    0